-தொல்பொருன் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு-
-இ.கலைஅமுதன்-
யாழ்.நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு – வெடியரசன் கோட்டைப் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தொல்லியல் திணைக்களம் முறைப்பாடளித்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசசபையின் சாரதிகள் இருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நான்கு பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான குறித்த நான்கு பேரும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


















