நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை உதவத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி, அவசரநிலை மற்றும் அதன் பின்னரான நடவடிக்கைகளில் நேபாளத்திற்கு ஆதரவளிக்க இலங்கை தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அவர், “மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் இலங்கையும் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளியொன்றை எதிர்கொண்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நேபாள மக்களின் துயரத்தை இலங்கை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மக்கள் சார்பில் நேபாள தலைமைத்துவத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


















