செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் தபால் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை, நேற்று (03.09.2026) நடைபெற்ற செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. அவர்கள் முன்வைத்துள்ளார்.
நேரியகுளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் தபால் சேவைக்கான தேவையை கருத்திற்கொண்டு, தபால் நிலையத்தை விரைவாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழு தலைவர் எதிர்வரும் வருட ஒதுக்கீட்டில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
இதன்பிற்பாடு பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் இதனை தனது முன்மொழிவாக சமர்ப்பித்திருந்தார்.

















