யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையின் இறுதி சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5 மணிக்கும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கும் இடம்பெறும். அதேநேரம் வழமையான ஏனைய சேவை நேரங்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















