4ஆவது தெற்காசிய சிரேஷ;ட தடளக சம்பியன்ஷpப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் நேற்று காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை சந்தித்தனர்.
இதன்போது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற விமானப்படை வீர வீராங்கனைகளுக்கு விமானப்படை தளபதியினால் பதவி உயர்வும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்தப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 59 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்,
அவர்களில் விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர். விமானப்படை விளையாட்டு வீரர்கள் 2தங்கப் பதக்கங்கள், 3வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றனர். இதன்போது பதக்கங்கள் வென்ற ஆறு வீர வீராங்கனைகள் கோப்ரல் நிலை பதவிக்கு உயர்த்தப்பட்டனர்.


















