வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வவுனியா தாய்பால் திணைக்களத்திற்கு முன்பாக 3291 நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் பந்தல் அமைத்து போராட்டம் நடத்திவரும் பந்தலிற்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.
இதன்போது காணாமல்போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


















