திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கபுகொல்லாவ – ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















