பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அந்த ஆசிய அணி நவம்பர் 9 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு செல்லும்.
இந்தத் தொடர் முழுவதும் குசல் மெண்டிஸ் அணியை வழிநடத்துவார்.
அதேவேளையில், அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்கவும் மேற்கொள்ளும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் முழு உடல் தகுதியை எட்ட வேண்டியுள்ளது.
இலங்கை அணி விபரம்: குசல் மெண்டீஸ் (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, பஷிந்து சூரிய பண்டார, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டீஸ், சோனல் தினுஷ, தனஞ்சய டிசில்வா, அஞ்சல பண்டார, கேஷர நுவந்த, பிரபாத் ஜயசூர்ய, மிலான் ரத்நாயக்க, லஹிரு குமார,அஷித பெர்ணான்டோ, டில்ஷான் மதுஷங்க, ஈசான் மலிங்க.


















