நாட்டில் பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக நடத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளில் இந்த வருடத்தில் மட்டும் 1947 ஆயதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள் இருப்பதாக நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சில பாதாள உலக குழுக்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருக்கின்றன.
இதனால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னதாக, இராணுவ முகாமொன்றிலிருந்து 78 ரி-56 ரக துப்பாக்கிகள், பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36 ஏற்கனவே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டில் பாதாள உலக குழுக்களையும், போதைப்பொருள் அச்சுறுத்தலையும் அரசாங்கம் ஒழிக்கும். இதற்கு முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.















