தொழில்நுட்ப வணிகம் மற்றும் சேவைத் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான சிலோன் பிஸ்னஸ் அப்ளேயன்ஸ் கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் சமூக பொறுப்பு திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் தலைவர் ஹர்ஷpக பிரனாந்து, இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு புத்தாக்கமான தொழில்நுட்பத்தை வழங்குவதை விட, அதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் எனத் தெரிவித்தார்.
ருவன் பிரனாந்து, கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். இந்த சிறிய கணினி, வாழ்க்கையில் பல கனவுகளையும், நம்பிக்கைகளையும் கொண்டுவரும் ஒரு வாய்ப்பாக அமையும் என நான் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிகழ்வுக்காக தனது நிறுவனத்துடன் இணைந்து உதவி செய்த Geekom நிறுவனத்திற்கும் ருவத் பிரனாந்து தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.


















