அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















