முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது பிறப்பித்தது.
இன்றைய விசாரணையின்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் டி-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















