-த.சுபேசன்-
புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் அமைந்துள்ள கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தின் சுற்றாடலில் அமைந்துள்ள இரண்டு நன்னீர் கிணறுகள் தமிழ்த் தேசிய பேரவையின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனின் நிதியுதவியில் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
புங்குடுதீவு – நயினாதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர். வே.சு. கருணாகரன் நினைவாக மேற்படி செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
அதிகளவான மக்கள் பயன்படுத்துகின்ற மேற்படி கிணறுகளில் சவர்க்கார உறைகள் போன்ற குப்பைகளை போடாது உங்கள் வீட்டு கிணறு போன்று அக்கறையுடன் பயன்படுத்துமாறு பிரதேச சபை உறுப்பினர் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


















