நுவரெலியா – இராகலை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவு சொத்துக்கள் நாசமாகியுள்ளன.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் நேற்று அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தீ விபத்தில் குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் உள்ளே இருப்பில் வைக்க ப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலில் மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பறவியதாகவும் இதுவே முழுவதும் பரவிய தாகவும் தெரிவிக்கின்றனர் தீ விபத்துக்கான உரிய காரணம்
இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















