நாட்டின் பயணிகள் போக்குவரத்து சேவையை மேலும் முறைப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட 106 புதிய மெட்ரோ பேருந்துகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இதற்கமைய, இன்று பிற்பகல் இந்தக் கப்பல் கிழக்கு முனையத்தை வந்தடையவுள்ளதாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணிகளின் போக்குவரத்து சேவையை மேலும் வினைத்திறனாக்கும் வகையில் இந்த புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளுக்கான தொழில்நுட்பப் பரிசோதனைகள் மற்றும் பதிவுச் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக அவை சேவையில் இணைக்கப்படவுள்ளன.


















