கபுகொல்லேவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கபுகொல்லேவ – துட்டுவௌ பகுதியில், புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சனிக்கிழமை பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கபுகொல்லேவ, துட்டுவௌபகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கபுகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















