புத்தளம், கற்பிட்டி – தலவில கடல் பகுதியில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள் நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி – தலவில கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படை கப்பல் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துகொண்டிருந்த சில உரமூடைகளை பரிசோதனை செய்தனர்.
இதன்போது, 41 உரமூடைகளில் அடைக்கப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யும் நோக்கில் கடத்தல்காரர்களினால் கொண்டுவரப்பட்ட குறித்த பீடி இலைகள், கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.


















