புத்தளம் – ஆண்டிமுனை பகுதியில் உள்ள இயந்திர படகு கடற்றொழிலாளர்களின் வலையில் நேற்று காலை பெருந்தொகையான சாலை மீன்கள் பிடிக்கப்பட்டன.
அதிகாலை 4 மணியளவில் இவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கமாகும். நேற்று இவர்களுக்கு பெருந்தொகையான சாலை மீன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சாலை மீன் சுமார் ஒரு கிலோ 100 ரூபா வரை சந்தையில் விற்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் சந்தோஷத்தில் காணப்பட்டனர்.


















