-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மற்றும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று அதிபர் க.கருணாநந்தன் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் முன்னை நாள் அதிபரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிருமான தில்லையம்பலம் வரதன் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி ஆர் ரவீந்திரன, பழைய மாணவர்களான பொறியியலாளர் ம.கம்சானந் பா.தனுசாந் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சதீஸ்குமார் தர்சினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


















