இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.
இதனுடன் இணைந்ததாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒரு விசேட ஊடகச் சந்திப்பும் நடத்தப்பட்டது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும். சட்டக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாண்டி பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது ஒரு சாதகமான நிலைமையாகும். பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதைச் சமூகமயமாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.















