பாதுகாப்பான போக்குவரத்தின் அவசியத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி Uber நிறுவனத்தினால் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கை வடமாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெறுவதையும், போக்குவரத்தின்போது பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


















