-கஜிந்தன்-
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் வடமராட்சி கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
பெண்களின் அடிப்படை சட்ட உரிமைகள் தொடர்பாக பயிற்சியூட்டப்பட்ட பெண்களுக்கு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆதனைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்;கப்பட்டன.
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் உஷ சுபலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரோகிணி, மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மருதங்கேணி கிராம நிர்வாக அலுவலர், பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


















