ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சில் ஈடுபடுவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் ஜனநாயக பல கட்சி முறையைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவருவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது


















