பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளைப் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரும் அடங்குவதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதுடன், அவர்களிடம் சிறிய அளவில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















