-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு சூழலை மாசடையச் செய்யும் விதமாக பொது இடங்களில் வெடி கொளுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன்.டி.போல் டக்களஸ் போல் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


















