எமக்குத் தேவையான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியாமல் போனமையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டொலர்களை ஈட்டக்கூடிய 4 பிரதான துறைகளும் வரலாற்றில் அதிக வளர்ச்சியை இந்த ஆண்டில் அடைந்துள்ளன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக 2025 அமைந்துள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.


















