மிரிஹான பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகாவத்தவின் அலுவலகத்தில் உள்ள அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளன.
வருணி போகாவத்த தற்போது உடல்நலக்குறைவு காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே புகைப்படத்திற்கு மாலை அணிவித்தமை நிகழ்ந்துள்ளதாகவும் மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் இது குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருணி போகாவத்த தனது உத்தியோகபூர்வ கடமைகளின் போது இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பில் பொலிஸார் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















