சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கடந்த சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் க.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி ஆகியோர் வரவேற்றனர்.
அவர்களின் களவிஜயத்தின் ஞாபகார்த்தமாக யாழ். மாவட்ட செயலரிடம் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதோடு, பழைய பூங்காவில் மரக்கன்றுகளும் நடுகை செய்யயப்பட்டது.
இவ்விஜயத்தில் FAIR MED நிறுவனத்தினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.உமாசங்கரால் விளக்கமளிக்கப்பட்டது.
இவ் நல்லிணக்க விஜயத்தில் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, கோப்பாய் ‘கிறவ்ரறி’ கலைப்பொருள் உற்பத்தி நிலையம் மற்றும் சக்கர நாற்காலி திருத்தகம் என மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக களத்தரிசிப்புக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















