மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் பொலிஸார் கைது செய்யும்போது 28 பக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டிருந்த 2040 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் – றகுமானியா வீதியை சேர்ந்த போதை வியாபாரியான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரியிடம் தன்னை கைது செய்யும்போது தன்வசம் இருந்த 28 சிறிய பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கி உள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸாரிடமே எவரிடமும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபரை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க செய்த போது மலத்துடன் வாயில் போட்டு விழுங்கிய 28 பக்கற்றுக்கள் கொண்ட1960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.
இதில் சிறையில் அடைக்கப்பட்ட 45 வயதுடைய அவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் இவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மீண்டும் இந்த வழக்கிற்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















