பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க பொலிஸ்மா அதிபருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், சபாநாயகர் தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், குறித்த கடிதம் சபாநாயகர் அலுவலகம் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.


















