-சொ.வர்ணன்-
யாழில் நீண்டகாலமாக வடமாகணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் இடமாற்றம் இன்றி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையாற்றிய நிலையில் அவருக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் வரை முறைப்பாடுகள் சென்ற நிலையில் அனுராதபுரத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.


















