புத்தளம் தொட்டுவாவ பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுட்களுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சுயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹவௌ, தொட்டுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுகயீனமுற்ற இளைஞன் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் போதைப்பொருட்களுக்கு அடிமையானவரா அல்லது தெரியாமல் போதைப்பொருளை பாவனை செய்தாரா என்பது தொடர்பில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொட்டுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















