நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேகநபர் 2000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.
அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சந்தேகநபர் நேற்றுமுனதினம் கைதானார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்ய போதைப்பொருள் கொள்வனவு செய்பவர் போன்று மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் 70 மில்லிகிராம் போதைப்பொருளை பேரம் பேசி 2000 ரூபாவை கைமாற்றும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான 29 வயது மதிக்கத்தக்க குவைத் சிட்டி நிந்தவூர் 9 பிரிவில் வசிக்கும் சந்தேகநபரிடமிருந்து 1250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்,900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 20 ஆயிரம் ரூபா பணம், 2 கைத்தொலைபேசிகள், போதைப்பொருளை அளவீடு செய்வதற்கான இலத்திரனியல் தராசு உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


















