-பா.சதீஸ்-
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் கணவன், மனைவி உட்பட 5 பேர் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபா பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடசூரியவின் தலைமையில் நடந்த இக் கைது நடவடிக்கையின் போது, கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும், சந்தேக நபர்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சான்றுப் பொருட்களுடன் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
















