யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் யாழ். நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 25 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் 44, 47, 48 வயதுடையவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















