-பா.பிரதீபன்-
யாழில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்.பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறுகால்மடப்பகுதியில் மேற்படி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர்.
இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















