-க.சபேஷன்-
யாழ்.சாவகச்சேரி பகுதியில் சுமார் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியைச் சேர்;ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து 300 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைதான சந்தேகநபர், பொலிஸ் விசாரணையில் உள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.


















