சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது.
தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரியும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.


















