மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இன்று வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது.
இதன்போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், திருமதி கிருஷ்ணராஜ் லிசாந்தினியால் கவி அஞ்சலியும், ஆசிரியர் கதிர்வண்ணனால் நினைவுரையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


















