-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
-சு.பாஸ்கரன்-
வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் வனவள திணைக்களத்தினால் 2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவாதம் இடம்பெற்ற போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
யுத்த காலத்தில் கிளிநொச்ச மாவட்டத்திலிருந்து அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்தனர்.இம்மாவட்டத்தில் நீண்ட காலமாக இடம்பெற்ற போரினால் மக்கள் குடியிருப்பு காணிகள் காடுகளாக மாறியிருக்கின்றன. அந்த காணிகளை வனவளத்திணைகளம் ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இக் கலந்துரையாடலில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.


















