மட்டக்களப்பு, வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைக்குண்டு மீட்பு தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















