மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
தாயும், புதிதாகப் பிறந்த ஐந்து சேய்களும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அபூர்வ நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


















