பொலன்னறுவை – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாகனேரி 125ஆவது மையில் கல் பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் அரச புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சம்பவதினடான நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.50 மணியளவில் குறித்த இடத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டுகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று நேற்று வெடிக்க வைத்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















