நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கடவத்தை முதல் மீரிகம வரையிலான நீண்ட கால தாமதமான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்பகுதியை நிர்மாணிப்பதற்கான சீன நிதியுதவி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் செப்டெம்பர் அல்லது ஒக்டோபரில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் 171வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போது, ஜனாதிபதியின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ இந்த அறிக்கையை வெளியிட்டார்.
37 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வீதிப் பிரிவின் கட்டுமானத்திற்கு சீனாவிடமிருந்து தேவையான நிதி உதவியை இலங்கை பெற முடிந்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள கட்டுமானப் பணிகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு, கட்டுமானம் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் இரண்டரை ஆண்டுகளுக்குள் திட்டம் நிறைவடையும் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.


















