மன்னாரில் டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த 65 வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
ஆதாவது 42 இந்து ஆலயங்கள், 17 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 6 பள்ளிவாசல்களுக்கு தலா 25,000 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவுகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


















