மன்னாரில் சிரிதோப்புவ கடற்கரைக்கு அருகில் 91 பறவைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர்.

இவர்கள் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றம் 52 வயதுடையவர்கள் எனவும், இவர்களிடமிருந்து 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டைக்கோழிகள் என்பன கைப்பற்றப்பட்டன என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதன்போது கடத்தல் முயற்சிக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கிப் படகும் பறிமுதல் செய்யப்பட்டு பேசாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.



















