சீரற்ற காலநிலையினால் பிளாஸ்டிக் துகள்கள் மன்னார் கரையோரப் பகுதிகளில் தற்போது ஒதுங்கி வருகின்றன.
பேசாலை, காட்டாஸ்பத்திரி , சிறுத்தோப்பு ஆகிய கடற்கரையோரங்களிலேயே துவல்கள் கரையொதுங்கி வருகின்றமையை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியில் அண்மையில் விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கிற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள் மன்னார் கடற்கரையோர பகுதிகளில் கரை ஒதுங்கியது.
இந்த பிளாஸ்டிக் துவல்கள் ஏற்கனவே அகற்றும் பணிகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் மீண்டும் மன்னாரில் பிளாஸ்டிக் துவல்கள் கடற்கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















