-பா.பிரதீபன்-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு, மற்றும் மன்னார் கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் ஒப்படைக்கப்பட்ட 12 மீனவர்களும், நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


















