மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், வருமான வரி பரிசோதகர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சி குத்தகை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபை பிரிவுகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதற்கு அமைவாக ஒரு கிலோ தனிஇறைச்சி 2,200 ரூபாவுக்கும் , ஒரு கிலோ முள் இறைச்சி 2,000 ரூபாவுக்கும் ஒரு கிலோ ஈரல் 2,500 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர் , தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.


















