ஹட்டன் – வனராஜா பகுதியில் நேற்று காலை பைனஸ் மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹட்டன் – பலாங்கொடை, பொகவந்தலாவை – ஹட்டன், சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் கம்பமும் விழுந்து சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீர்படுத்தும் பணிகள் மின்சாரசபையினால் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச மக்கள் இணைந்து, மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


















